மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் சாவு
மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் கக்கோடுகுளம் கரையில் புதன்கிழமை காலையில் கேட்பாரற்ற நிலையில் ஆட்டோ நின்றதை அங்கு குளிக்க வந்தவர்கள் பார்த்தனர். தொடர்ந்து அவர்கள் குளத்து நீரில் ஒருவரது சடலம் மிதப்பதையும் பார்த்து மார்த்தாண்டம் போலீஸாருக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்புப் படை வீரர்கள் வந்து குளத்தில் மிதந்த சடலத்தை மீட்டனர். போலீஸார் வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் நட்டாலம் இடைக்கோட்டான்விளை பகுதியைச் சேர்ந்த ராஜையன் மகன் ஆட்டோ ஓட்டுநரான ராஜேஷ் (35) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.