அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் தெருமுனைக் கூட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பில் தெருமுனைக் கூட்டம் அழகியமண்டபத்தில் நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பில் தெருமுனைக் கூட்டம் அழகியமண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். செயலர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். சங்க உதவித் தலைவர் சின்னன்பிள்ளை விளக்கவுரையாற்றினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், சிஐடியூ மாவட்டச் செயலர் தங்க மோகனன், ஜான் சுந்தர்ராஜ், செயல் தலைவர் லட்சுமணன், ஓய்வு பெற்றோர் அமைப்பைச் சேர்ந்த சோபனராஜ், விவசாய சங்கம் சைமன்சைலஸ், கட்டுமானச் செயலர் சகாய ஆன்றணி ஆகியோர் பேசினர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியத்தை முதல் தேதி அன்றே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.