பத்மநாபபுரத்தில் மாணவர், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர்
பத்மநாபபுரம் நகராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, தக்கலை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பத்மநாபபுரம் நகராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, தக்கலை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், நகராட்சி முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை எம்.வி.புஷ்பலதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீ.முத்துராமலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.