பளுகல் அருகே வீடு புகுந்து நகை திருடியவர் கைது
பளுகல் அருகே வீடு புகுந்து நகைகளை திருடியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பளுகல் அருகே வீடு புகுந்து நகைகளை திருடியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பளுகல் அருகேயுள்ள மேல்பாலை, கொட்டறக்காலவிளை பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் ஆன்றணி (37). கூலித் தொழிலாளி. இவரது மனைவி முந்திரி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்குச் செல்லும் போது வீட்டுக் கதவை பூட்டிய பின் சாவியை வீட்டின் வெளிப்பகுதியில் மறைத்து வைத்துவிட்டு செல்வது வழக்கமாம்.
புதன்கிழமை வழக்கம்போல் தம்பதி வேலைக்கு சென்றனராம். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுள்ளனர். மதியம் அவர்கள் வீட்டுக்கு வந்த போது, வீட்டுக் கதவு திறந்து கிடந்துள்ளது. தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்த போது அலமாரியில் வைத்திருந்த 13 கிராம் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மகன் ராஜமணி, ஆன்றணியின் வீட்டுக் கதவை திறந்து நகை திருடியது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.