குமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை: 76 அடியை எட்டும் பெருஞ்சாணி அணை நீர்மட்டம்
குமரி மாவட்டத்தில் 2 நாள் ஓய்வுக்குப் பின்னர் திங்கள்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் 2 நாள் ஓய்வுக்குப் பின்னர் திங்கள்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் தொடர் சாரல் மழை பெய்து வந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழை சற்று ஓய்ந்து காணப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் முதல் மாவட்டத்தில் அணைப் பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் சாரல் மழை மீண்டும் பெய்தது.
அணைகளில் நீர்மட்டம்: திங்கள்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 13.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 614 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 598 கன அடி நீர் பாசன கால்வாயில் சென்று கொண்டிருந்தது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 431கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 609 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்து. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 15.91 அடியாக உயர்ந்திருந்தது.
அணைக்கு விநாடிக்கு 125 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த அணை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து இந்த அணையிலிருந்து விநாடிக்கு 125 கன அடி தண்ணீர் பாசனக் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 16 அடியாக இருந்தது.
மழை சற்று தணிந்திருந்த நிலையில் திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை காலையில் தண்ணீரின் வேகம் சற்றுத் தணிந்து, உருகிய வெள்ளி வடிவது போல் கொட்டிக் கொண்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.