FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

களியக்காவிளையில் வாகனச் சோதனை: தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயங்கிய  கல்லூரி பேருந்து, 5 கேரள வேன்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை களியக்காவிளையில் மேற்கொண்ட வாகன தணிக்கையில்,

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை களியக்காவிளையில் மேற்கொண்ட வாகன தணிக்கையில்,  2 ஆண்டுகளாக தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட தனியார் கல்லூரி பேருந்து மற்றும் சாலை வரி செலுத்தாமல் இயங்கிய 5 கேரள பதிவெண் கொண்ட வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசுப் பேருந்துகளுக்கு இணையாகவும்,  பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையிலும் தனியார் மேக்ஸி கேப் வேன்கள் இயக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும்,  மாவட்ட ஆட்சியருக்கும் புகார்கள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின் பேரில்,  மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் களியக்காவிளையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில்,  தமிழகத்தில் சாலை வரி செலுத்தாமலும், அனுமதிச்சீட்டு இல்லாமலும் இயக்கப்பட்ட கேரள பதிவெண் கொண்ட 5 மேக்ஸி கேப் வேன்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 
தொடர்ந்து மேற்கொண்ட வாகனச் சோதனையில்,  அப்பகுதி வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.  இப் பேருந்து 2 ஆண்டுகளாக தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. 
பறிமுதல் செய்யப்பட்ட மேக்ஸி கேப் வேன்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும்,  தொடர்ந்து வாகனச் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments