நாகர்கோவிலில் செய்குதம்பி பாவலர் பிள்ளைத்தமிழ் நூல் வெளியீட்டு விழா
சுதந்திரப் போராட்டவீரரும், தமிழ்ப் புலவருமான சதாவதானி செய்குதம்பி பாவலர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
சுதந்திரப் போராட்டவீரரும், தமிழ்ப் புலவருமான சதாவதானி செய்குதம்பி பாவலர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் திருவை அப்துல்ரகுமான் தலைமை வகித்தார். பாவலர் தமிழ்ச் சங்கத் தலைவர் பாவலர் சித்திக் வரவேற்றார். கவிஞர் தமிழ்க்குழவி எழுதிய சதாவதானி செய்குதம்பி பாவலர் பிள்ளைத்தமிழ் நூலினை சிங்கப்பூர் தொழிலதிபர் ஜாபர்சாதிக் வெளியிட, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் பெற்றுக்கொண்டார். கவிஞர் ஜமால்முகமது அறிமுக உரையாற்றினார்.
நிகழ்ச்சியில், ராஜகோகிலா அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ராஜகோபால், தமிழ்நல எழுத்தாளர் சங்கத் தலைவர் முத்துக்கருப்பன், கொய்யாகாஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் தக்கலை பஷீர், கவிஞர் தங்கசாமி, டாக்டர் சிதம்பரநடராஜன், ஹம்ஸா, கவிற் அத்தாவுல்லா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உஷாசாந்தாஜாஸ் பாராட்டப்பட்டார். பாவலர் தமிழ்ச்சங்கப் பொருளாளர் மலுக்குமுகமது நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.