பாகோடு திரு இருதய பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம்
குழித்துறை மறைமாவட்டம் பாகோடு திரு இருதய உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
குழித்துறை மறைமாவட்டம் பாகோடு திரு இருதய உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
பங்குத்தந்தை ஜான்சன் பிரிட்டோ தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை லைலாமேரி கேதரின் வரவேற்றார். சிகரம் கல்வி மைய இயக்குநர் செபாஸ்டின் கருத்தரங்கை தொடங்கிவைத்தார். மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி பென்சிகர் ராஜன், "இந்திய விண்வெளி ஆய்வு' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி, பல்வேறு திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். மேலும், மாணவர்களின் அறிவியல் சார்ந்த பல்வேறு வினாக்களுக்கு விஞ்ஞானி விளக்கமளித்தார். பள்ளித் தாளாளர் இருதயதாசன் நிறைவுரையாற்றினார். அறிவியல் ஆசிரியை ஜாஸ்மின்மேரி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.