மாநில அளவிலான போட்டி: முளகுமூடு பள்ளி சிறப்பிடம்
தமிழக அரசுப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டிகளில், முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
தமிழக அரசுப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டிகளில், முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட அளவில் கரகம், கவிதை, பேச்சு, பேண்டு வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற இப்பள்ளி மாணவர், மாணவிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வீதி நாடகம் போட்டியில் முதல் பரிசும், நாத சங்கமம், பானை ஓவியம், இணைய கருத்துருவாக்கம், ஆர்கெஸ்ட்ரா, கணினி ஓவியம், புகைப்படம் எடுத்தல், போன்ற போட்டிகளில் பங்கேற்று 11 பரிசுகளை வென்றனர்.
அவர்களுக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் வேலுமணி, சத்துணவு அமைச்சர் சரோஜா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டோமினிக் எம்.கே.தாஸ், பள்ளி முதல்வர்கள் மெர்சி ஆப்ரகாம், ஜோரன்சி சேவியர், பங்குப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.