மார்த்தாண்டத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள குழித்துறை கிளை எல்.ஐ.சி. அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள குழித்துறை கிளை எல்.ஐ.சி. அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்துக்கு முகவர் சங்கச் செயலர் எஸ். பீட்டர் தலைமை வகித்தார். அமைப்பின் தலைவர் சி. மோகனன் முன்னிலை வகித்தார். இதில், இணைச் செயலர் பிரபாகரன், பொருளாளர் ஆர். ராஜமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பிரிமியத்தொகையின் மீதும், தாமதக் கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும், காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான கால அளவை 2 வருடத்திலிருந்து 5 வருடமாக மாற்ற வேண்டும், லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டும் எல்ஐசி நிதியை முதலீடு செய்ய வேண்டும், முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.