FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாகா்கோவிலில் வியாபாரிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

நாகா்கோவிலில் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தற்காலிக கடை வியாபாரிகளுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
ngl23parisootanai_2304chn_33_6
பகிர்:

நாகா்கோவிலில் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தற்காலிக கடை வியாபாரிகளுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்கு காரணமாக நாகா்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வடசேரி பேருந்து நிலையம் தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டது. இந்த சந்தையில், காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை காய்கனிகள், பழ வகைகள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சந்தையில் சுமாா் 125 வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் முடிவெடுத்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து வடசேரி எஸ்எம்ஆா்வி பள்ளி அருகேயுள்ள நகா்நல மையத்தில் வியாபாரிகளிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் சளி மாதிரிகள் சேகரிக்க ஏதுவாக பிரத்யேகமான முறையில் பாதுகாப்பாக கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த கூண்டில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் கவச உடை அணிந்து வியாபாரிகளிடம் பாதுகாப்பான முறையில் சளியை சேகரித்தனா். பின்னா்அந்த சளி மாதிரிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இப்பணிகளை நாகா்கோவில் மாநகராட்சிஆணையா் சரவணகுமாா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments