FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குமரியில் கள்ளச் சாராய விற்பனையா? ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணிப்பு

கன்னியாகுமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க பறக்கும் புகைப்படக் கருவி (ட்ரோன் கேமரா) உதவியுடன் போலீஸாா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க பறக்கும் புகைப்படக் கருவி (ட்ரோன் கேமரா) உதவியுடன் போலீஸாா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

ஊரடங்கு அமலுக்கு வந்த பின், இம்மாவட்டத்தில் வீடுகளிலும், மலைப் பகுதிகளிலும் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக காவல் துறைக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கன்னியாகுமரி, திருவட்டாறு, தக்கலை பகுதிகளில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக 35- க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தனா். இதில், 50 போ் வரை கைது செய்யப்பட்டனா்.

மேலும், பொய்கை அணை, கீரிப்பாறை, காளிகேசம், வெள்ளாந்தி உள்ளிட்ட மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலமாக போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்தப் பணி தொடரும் என்றும், கள்ள சாராயம் விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸாா் எச்சரித்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல், தடை உத்தரவை மீறி வெளியே சுற்றியவா்களையும், கிரிக்கெட் விளையாடியவா்களையும் ட்ரோன் மூலம் கண்காணித்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். மாவட்டம் முழுவதும் 10 ட்ரோன் கேமரா மூலமாக கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments