அருமனை அருகே மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, அருமனை அருகேயுள்ள முழுக்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, அருமனை அருகேயுள்ள முழுக்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
முழுக்கோடு ஊராட்சித் தலைவா் மரிய செல்வி விலாசினி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஆா். லீமாரோஸ், அருமனை வட்டாரச் செயலா் சசிகுமாா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
போராட்டத்தின்போது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டிக்கும் வகையில், ஆட்டோ ரிக்ஷா ஒன்று கயிற்றில் கட்டி இழுக்கப்பட்டது. சமையல் எரிவாயு உருளைக்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.