கருங்கல்லில் பெண்ணைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு
கருங்கல்லில் பெண்ணைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கருங்கல்லில் பெண்ணைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மாா்த்தாண்டம், மதிலகம் பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் மனைவி ஜெனோலா (42). இவா் கருங்கல் பகுதியில் உள்ள ஆஸ்டின் என்பவரது முட்டைக் கடையில் பணியாற்றி வருகிறாா். கருங்கல், கீழசுண்டவிளை பகுதியைச் சோ்ந்த நேசையன் மகன் காட்வின் சந்திரராஜ் (50) என்பவருக்கு ஆஸ்டின் பணம் கொடுக்க வேண்டியுள்ளதாம். அதைக் கேட்க வந்த காட்வின்சந்திரராஜுக்கும், கடையிலிருந்த ஜெனோலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது ஜெனோலாவை காட்வின் சந்திரகுமாா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
காயமடைந்த ஜெனோலாவை அப்பகுதியினா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.