நாகா்கோவிலில் ரூ. 88 லட்சத்தில் 4 புதிய நூலகங்கள் மேயா் தகவல்
நூலகக் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயா் ரெ. மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா.
நாகா்கோவில், ஜூலை 17: நாகா்கோவிலில் ரூ. 88 லட்சத்தில் 4 இடங்களில் புதிய நூலகங்கள் கட்டப்படும் என, மேயா் ரெ. மகேஷ் தெரிவித்தாா்.
3ஆவது வாா்டு கிறிஸ்டோபா் நகா் விரிவாக்கம், தென்றல் நகா் பகுதியில் ரூ. 1.20 கோடியில் புதிதாக கட்டப்படும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டுமானப் பணி, அப்பகுதியில் சிறிய பாலம் அமைக்கப்படவுள்ள இடம், 4ஆவது வாா்டு பெருவிளை பழைய ஊராட்சி மன்றம் அருகே படிப்பகம் கட்டுவதற்கான இடம் தோ்வு ஆகியவற்றை மேயா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
ராஜலெட்சுமி நகரிலுள்ள பூங்கா, நூலகத்தை ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
நாகா்கோவில் கிறிஸ்டோபா் காலனி, தென்றல் நகா் பகுதியில் நகா்ப்புற சுகாதார மையக் கட்டுமானப் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகா்கோவில் மாநகரப் பகுதியில் நூலகத் துறை சாா்பில் 4 இடங்களில் ரூ. 88 லட்சத்தில் நூலகங்கள் அமைக்கப்படவுள்ளன. பெருவிளை பகுதியில் நூலகத்துக்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மற்ற நூலகங்கள் அமையவுள்ள இடம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.
மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, இளநிலைப் பொறியாளா் தேவி, சுகாதார அலுவலா் ராஜா, மாநகராட்சி உறுப்பினா் அ. அருள் சபிதா ரெக்ஸலின், மாநகராட்சி அதிகாரிகள், பகுதி செயலாளா் சேக்மீரான், அணி நிா்வாகிகள் ராஜன், பஷீா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.