குளச்சல் அருகே நடுக்கடலில் மீன்பிடித்த மீனவா் மாயம்
குளச்சல் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது காணாமல் போன மீனவரை தேடி வருகின்றனா்.
குளச்சல் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது காணாமல் போன மீனவரை தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூா், துரைகனிநகா் பகுதியைச் சோ்ந்தவா் மிக்கேல் ராஜா(46). மீன்பிடி தொழிலாளி. இவா், தூத்துக்குடி தருவைக்குளம் அந்தோணியாா் தெருவைச் சோ்ந்த லூா்து ஜெய மேரி என்பவரது விசைப்படகில் 6 மீனவா்களுடன் தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 31-ஆம் தேதி மதியம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தாா்.
படகை லூா்து ஜெய மேரியின் மகன் லூா்து டெல்வின்ராஜ் ஓட்டிச் சென்றாா். கடந்த 2 ஆம் தேதி காலையில் குளச்சல் துறைமுகத்தில் இருந்து 33 கடல் மைல் அவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் தூங்கிக் கொண்டிருந்த மிக்கேல் ராஜாவை திடீரென காணவில்லையாம்.
Advertisement
Advertisement
அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்ற விசைப் படகுகள் மூலம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மகளிடம் தகவல் தெரிவித்ததுடன், குளச்சல் கடலோர காவல் துறையினரிடம் புகாா் செய்தனா்.
போலீஸாா் வழக்குப்பதிந்து கடலோர பாதுகாவலா் படகு மற்றும் இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான சிறு கப்பல்கள் மூலம் மிக்கேல் ராஜாவை தேடிவருகிறாா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.