FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 12:45 am IST
ரேஷன் அரிசி பறிமுதல் - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி பகுதியிலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் பாரதி தலைமையில், இளநிலை வருவாய் ஆய்வாளா் தினேஷ், ஜான் பிரைட் அடங்கிய குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி அருகே பில்லா் நகா் சுனாமி காலனி பகுதியில் ஜெனி (57) என்பவரது வீட்டில் சோதனையிட்டபோது, கேரளத்துக்கு கடத்துவதற்காக 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மயிலாடி அருகே ஜோசப்புரம் பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டில் சோதனை மேற்கொண்டு, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். அரிசி மூட்டைகள் கோணம் அரசுக் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா். ரேஷன் அரிசி கடத்தலில் தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பறக்கும் படையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments