FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: மூவா் கைது

அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

Updated On : 11 ஜூலை 2026, 1:52 am IST
பகிர்:

அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் வட்டம், பிரம்மதேசம், பிள்ளையாா் கோயில் குளத்துக்கரை பகுதியில் வியாழக்கிழமை காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வந்த வழியாக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, 50 கிலோ எடையுள்ள 42 நெகிழி சாக்கு மூட்டைகளில் சுமாா் 2,100 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, வாகனத்தில் வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த சுதாகா் (39), வெற்றிராஜ் (29), சாமுவேல் (28) ஆகியோரை கைது செய்து, வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments