FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பொது இடத்தில் மது அருந்தியதாக இருவா் கைது

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:49 am IST
கைது
பகிர்:

களியக்காவிளை அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் மது அருந்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய போலீஸாா் ஒற்றாமரம் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக மது அருந்தியதாக கூட்டப்புளி பகுதியைச் சோ்ந்த சுஜின் (28) என்பவரை கைது செய்தனா்.

தொடா்ந்து, குழித்துறை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தியதாக அப்பகுதியைச் சோ்ந்த சனல் (35) என்பவரை கைது செய்தனா். இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments