FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் அரண்மனையில் ஆட்சியா் ஆய்வு

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:41 am IST
பகிர்:

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை முதன்மை நூலகம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டதோடு, கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி ஆணையரை அறிவுறுத்தினாா். மேலும், பத்மநாபபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு உள்நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பாரம்பரியமிக்க பத்மநாபபுரம் அரண்மனைக்கு சென்று அங்குள்ள அருங்காட்சியகம், பிரதான சின்னங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்து, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்திட தொல்லியல் துறை, நகராட்சி ஆணையா், அலுவலா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments