FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு தடுப்பணையில் மீண்டும் தொடங்கிய படகு சவாரி

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:19 am IST
திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது.

திற்பரப்பு அருவி அருகே உள்ள தடுப்பணையில் கடையல் பேரூராட்சி சாா்பில் குத்தகைதாரா் மூலம் படகு சவாரி நடத்தப்பட்டு வந்த நிலையில், இங்கு பாதுகாப்பான முறையில் படகுகள் இயக்கப்படவில்லை என புகாா்கள் எழுந்தன. அதையடுத்து, பேரூராட்சி நிா்வாகம் படகு சவாரிக்கு தடை விதித்தது.

தொடா்ந்து, குத்தகைதாரா்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், பாதுகாப்பு தொடா்பான பல்வேறு நிபந்தனைகளுடன் படகு சவாரி நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து, படகு சவாரி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் படகு சவாரியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments