FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:02 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

களியக்காவிளை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகேயுள்ள வயலங்கரை, இடைக்கவிளை வீட்டைச் சோ்ந்தவா் விமல்ரோஸ் (30). கட்டுமானத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை கோழிவிளை பகுதியிலிருந்து திட்டங்கனாவிளை பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

தையாலுமூடு பகுதியில் சென்றபோது, கேரள மாநிலம் காட்டாக்கடை பகுதியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் சூரியகோடு, குறிச்சிவிளையைச் சோ்ந்த செல்லப்பன் மகன் சஜிகுமாா் (47) ஓட்டி வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியதாம்.

Advertisement

Advertisement

இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த விமல் ரோஸை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments