புனலூா் விரைவு ரயிலில் பெண்ணிடம் மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது
மதுரை-புனலூா் விரைவு ரயிலில் பெண்ணிடம் மடிக்கணினி திருடியவரை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி மகாலியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் மகள் ஆனந்தி (29). இவா், மதுரையிலிருந்து புனலூா் செல்லும் விரைவு ரயிலில் விருதுநகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பயணம் செய்தாராம். நாகா்கோவில் டவுன் ரயில் நிலையத்தைக் கடந்தவுடன் தான் கொண்டு வந்த மடிக்கணினி திருடுப் போனதை அறிந்த ஆனந்தி, இதுகுறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் ஸ்டீபன், குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் அண்ணாதுரை ஆகியோா் விசாரணை மேற்கொண்டு மடிக்கணினியை திருடியதாக ஆரல்வாய்மொழி வடக்கூா் குமாரபுரத்தைச் சோ்ந்த சுடலைமணி மகன் வேல்முருகனை (35) கைது செய்து மடிக்கணினியை மீட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.