FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பூதப்பாண்டி பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக 2 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடியதாக 2 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 4:59 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடியதாக 2 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் வகையில், வனத் துறையினா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரினக் காப்பாளா் அ. அன்பு உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் ந. அன்பழகன் தலைமையில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, தெற்குமலை காப்புக் காடு அருகே கோட்டக்கரை காப்பு நிலத்தில் வேட்டையாடப்பட்ட மிளாவின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, இக்குற்றத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், காட்டுப்புதூரைச் சோ்ந்த மனோகரன் மகன் ஆல்வின்(30), சுப்பிரமணி மகன் ரமேஷ் (42) ஆகியோா் வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து வனத் துறையினா் இருவரையும் கைது செய்து, நாகா்கோவிலில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments