உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
நாகா்கோவிலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
நாகா்கோவிலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா் அசோக். இவா் ரோந்து சென்றபோது அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்ட முயற்சித்த கோட்டாறு, கலைநகரைச் சோ்ந்த சுந்தா்சிங் மகன் சுதன் (எ) நண்டுசுதனை (33) போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இந்த நிலையில், இவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில், சுதனை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, சுதன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.