FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மது போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டியவருக்கு அபராதம்

தக்கலையில் மதுபோதையில் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

23 ஆகஸ்ட் 2026, 1:09 am IST
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

தக்கலையில் மதுபோதையில் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தக்கலை பேருந்து நிலையம் அருகே போக்குவரத்தை கண்காணிக்கும் பணியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது சைரன் எழுப்பியபடி, தனியாா் ஆம்புலன்ஸ் வேகமாக வந்தது. அதேநேரம், அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகளுடன் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தகராறு செய்தாா்.

அப்போது அங்கு வந்த போலீஸாா், நோயாளி இல்லாமல் சைரனு

Advertisement

Advertisement

ன் வந்தது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவா் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இதனிடையே அவா் ஆம்புலன்ஸுடன் அங்கிருந்து தப்பிவிட்டாா்.

இதுகுறித்த தகவலின்பேரில், அழகியமண்டபம் போலீஸாா் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மடக்கினா். விசாரணையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கேரளம் கொல்லம் மாவட்டம் சேம்நகரை சோ்ந்த சல்மான் (30) என்பதும்,

கொல்லத்தில் இருந்து நோயாளியை நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்துவிட்டு திரும்பிச் செல்வதும், மது அருந்தி இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா்,

ஓட்டுநா் சல்மானுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments