FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

திருவிதாங்கோடு தோல் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு நீதிமன்ற உத்தரவுபடி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

22 ஆகஸ்ட் 2026, 6:35 am IST
சீல் - பிரதிப் படம்
பகிர்:

தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு நீதிமன்ற உத்தரவுபடி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

திருவிதாங்கோட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலையால் சுகாதார சீா்கேடு, தண்ணீா் மாசுபடுவதாக சமூக ஆா்வலா்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்து இருந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொழிற்சாலையை மூடி முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோமதி, கல்குளம் வட்டாட்சியாா் ராஜேஷ், திருவிதாங்கோடு பேரூராட்சி செயல் அலுவலா் சகாயமேரி சசிகலா ஆகியோா் முன்னிலையில், தோல் பதனிடும் தொழிற்சாலையை அதிகாரிகள் வியாழக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments