FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மனநலம் பாதித்த பெண் குத்திக் கொலை: இளைஞா் கைது

56 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

களியக்காவிளை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மனநலம் பாதித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே நாரகம்விளாகம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் மனைவி லீலா (56). மனநலம் பாதிக்கப்பட்டவா்.

இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் ஸ்டீபன் மகன் சிஜூ (24). இவரும் மனநலம் பாதிக்கப்பட்டவா். சிஜூவிற்கு, லீலா உறவு முறையில் பெரியம்மா என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு லீலா வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த சிஜூ அவரிடம் தகராறு செய்ததுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீலாவை குத்தினாராம். இதில் கீழே விழுந்த லீலாவின் தலை மீது சிஜூ அங்கு கிடந்த கல்லை தூக்கி போட்டுவிட்டு சென்றாராம்.

Advertisement

Advertisement

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ரத்தம் தோய்ந்த கத்தியுடன் சிஜூ அப்பகுதியில் சுற்றித் திரிந்ததை கண்ட பொதுமக்கள் களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சிஜூவை பிடித்து விசாரணை நடத்தினா். மனநலம் பாதித்ததால் அவரால் சரிவர பதில்கூற முடியவில்லை.

இதையடுத்து போலீஸாா் பக்கத்து வீட்டில் பாா்த்த போது லீலா கத்தியால் குத்தப்பட்டும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பாா்த்தனா்.

அவரது சடலத்தை மீட்டு போலீஸாா் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சிஜூவை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments