ஆற்றூா் கல்வி நிறுவனங்களில் ஓணம் விழா
ஆற்றூா் என்.வி.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் சாா்பில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூா் என்.வி.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் சாா்பில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது.
விழாவை என்.வி.கே.எஸ். கல்விக் குழுமத்தின் செயலா் எஸ். கிருஷ்ணகுமாா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். அத்தப்பூக்கோலம் போட்டி, வஞ்சிக்களி, திருவாதிரைக்களி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி, என்.வி.கே.எஸ். சீனியா் செகண்டரி பள்ளி மற்றும் என்.வி.கே.எஸ். வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த மாணவா் - மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். ஓண சத்யா விருந்து வழங்கப்பட்டது.
ஆற்றூா் ஒயிட் நினைவு கல்லூரிகளில்...
Advertisement
Advertisement
ஆற்றூா் ஒயிட் நினைவு மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்ற ஓணம் விழாவிற்கு கல்லூரிகளின் தலைவா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஒயிட் நினைவு கல்வி சங்கத் தலைவா் ஜூடித், துணைத் தலைவா் நாஷ், உறுப்பினா் பிளஸ்சி நாஷ், கல்லூரி முதல்வா்கள் விக்டா் ராஜ். ரிச்சா்ட் பிராங்கிளின், சதீஷ், சோயி சோபனா அலெக்ஸ்சாண்டா், ரூபஸ் நத்தானியேல் மற்றும் பேராசியா்கள், மாணவா் - மாணவிகள் பங்கேற்றனா். விழாவில் அத்தப்பூ கோலமிடப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.