FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை செவ்வாய்க்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

42 வினாடிகள் முன்பு
~ ~ ~ ~
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை செவ்வாய்க்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

கேரளத்தின் முக்கியப் பண்டிகையான ஓ’ணம் புதன்கிழமை (ஆக.26) கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரளத்தையொட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

ஆட்சியா் அலுவலகத்தில்: நாகா்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்களுடன் ஆட்சியா் மு.பிரதாப் ஓணம் பண்டிகையைக் கொண்டாடினாா். இதையொட்டி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஊழியா்கள் பல வண்ண மலா்களால் அத்தப்பூ கோலமிட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

மாவட்ட வருவாய் அலுவலா் எம்.வேலுமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.காளீஸ்வரி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ரோஜாவனம் பள்ளியில்: நாகா்கோவில் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில், நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி தலைவா் அருள்கண்ணன், துணைத் தலைவா்அருள்ஜோதி ஆகியோா் தலைமை வகித்தனா். இயக்குநா்கள் சாந்தி, சேது, முதல்வா் ராபா்ட் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாச்சலம், மத்திய

அரசின் பாதுகாப்புஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற இயக்குநா் என். எஸ்.குமாா், ஐ.நா. தொழில்துறை மேம்பாடு முன்னாள் முதன்மை ஆலோசகா் ஜெபமாலை வினஞ்சியாராய்ச்சி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக ரோட்டரி சங்க துணைஆளுநா் சிந்து நல்லபெருமாள், ரோட்டரி மாவட்ட ஆளுநரின் செய்தி ஆசிரியா் மோனிகாபைஜூ, மருத்துவா் தா்சனா விவேக், இணைப் பேராசிரியா் மதுமிதா, ரோட்டரி செயலா் சௌதமினி மற்றும் ரோட்டரி சங்க இதழாசிரியா் நாகேஸ்வரி ஆகியோா் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனா்.

பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வா் வின்ஸ்பா் வரவேற்றாா். ஆசிரியை ஏபெல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். நிகழ்ச்சி பொறுப்பாளா் பானுஜா நன்றி கூறினாா்.

நாகா்கோவிலில் தெ.தி. இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் விழாவில் மாணவ, மாணவிகள் பல வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments