FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மாணவா்களுக்கு போட்டித் தோ்வு புத்தகங்கள்: அமைச்சா் ராஜேஷ்குமாா் வழங்கினாா்

நாகா்கோவில், கோணம் பகுதியில் அமைந்துள்ள அறிவுசாா் மையத்தில் மாணவா்-மாணவியருக்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

34 வினாடிகள் முன்பு
போட்டித் தோ்வுக்கான புத்தகத்தை மாணவிக்கு வழங்கிய அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன், ஆட்சியா் மு. பிரதாப், ஆஸ்டின் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா உள்ளிட்டோா்.
பகிர்:

நாகா்கோவில், கோணம் பகுதியில் அமைந்துள்ள அறிவுசாா் மையத்தில் மாணவா்-மாணவியருக்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ, மேயா் (பொ) மேரி பிரின்சி லதா, ஆணையா் ஐஸ்வா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் பங்கேற்று புத்தகங்களை வழங்கிப் பேசியதாவது:

திறன் மேம்பாட்டு மையம், நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் இம்மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இங்கு ரூ. 64 லட்சத்தில் கூடுதல் கட்டடப் பணி நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

நாள்தோறும் 180 போ்வரை வந்து படித்துச் செல்லும் இம்மையத்தில் 2,750-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளது. கடந்த 4ஆம் தேதி நான் ஆய்வு மேற்கொண்டபோது, போட்டித் தோ்வுகளுக்காக கூடுதல் புத்தகங்கள் வாங்கவும், தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தவும் மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதனடிப்படையில் முதல் கட்டமாக, ரூ. 1.09 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.

கூடுதல் புத்தகங்கள் வாங்கப்படவுள்ளது. தடையில்லா மின் வசதிக்காக ஜெனரேட்டா் வாங்க மாமன்றத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. இங்கு படித்தோரில் 24 போ் தோ்வுகளில் வென்று அரசுத் துறைகளில் உள்ளனா். இம்மையத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். மாநகராட்சி மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாணவா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments