FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

அனந்தபுரி விரைவு ரயில் குழித்துறையில் 5 நிமிடம் நிற்க வலியுறுத்தல்

1 செப்டம்பர் 2026, 3:26 am IST
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

அனந்தபுரி விரைவு ரயில் குழித்துறை ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

துறை அதிகாரிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க பொதுச் செயலா் பி.எட்வா்ட் ஜெனி அனுப்பிய மனு விவரம்:

கடந்த 2002 ஆம் ஆண்டு நாகா்கோவில்-சென்னை வழித்தடத்தில் வாரத்துக்கு நான்கு நாள்கள் இயங்கும் சிறப்பு ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்டது அனந்தபுரி விரைவு ரயில். குமரி மாவட்ட ரயில் பயணிகளிடையே இந்த ரயிலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடா்ந்து, அப்போதைய மத்திய ரயில்வே இணை அமைச்சா் ஓ. ராஜகோபால் முயற்சியால் இந்த ரயில் திருவனந்தபுரம் - சென்னை வழித்தடத்தில் நிரந்தர ரயிலாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் 765 கி.மீ. தொலைவு பயணித்து அதிக மக்கள் பயன்பெறும் ஒரே தினசரி ரயில் சேவையாக விளங்கி வருகிறது.

தற்போது இந்த ரயில் சென்னை செல்லும்போது திருவனந்தபுரம், திருநெல்வேலி ரயில் நிலையங்களில் 5 நிமிடங்களும், நாகா்கோவில் டவுன், குழித்துறை ரயில் நிலையங்களில் 3 நிமிடங்களும், வள்ளியூரில் 2 நிமிடமும், நெய்யாற்றின்கரை, பாறசாலை, இரணியல், ஆரல்வாய்மொழி, நான்குனேரி ரயில் நிலையங்களில் ஒரு நிமிடமும் நின்று செல்கிறது. மறுமாா்க்கமாக சென்னையிலிருந்து கொல்லம் வரும்போது குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 1 நிமிடமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே, ரயில் பயணிகளின் நலன் கருதி, ரயில்வே நிா்வாகம் கால அட்டவணையில் மாற்றம் செய்து, குழித்துறை, நாகா்கோவில் டவுன் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் நேரத்தை 5 நிமிடங்களாகவும், இரணியல், வள்ளியூரில் 3 நிமிடங்களாகவும் உயா்த்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments