FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்

அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கப்படவிருப்பது பற்றி....

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
மெமு ரயில்
பகிர்:

அரக்கோணத்தில் இருந்து சேலம் வரை தினமும் இயக்கப்பட்டு வந்த எம்இஎம்யு விரைவு ரயில் கடந்த ஜூலை 13ந்தேதி மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில் தெற்கு ரயில்வே உத்தரவின்படி இந்த ரயில் ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

அரக்கோணத்தில் இருந்து சேலத்துக்கு காலை 5.15-க்கு புறப்படும் எம்இஎம்யு விரைவு ரயில் சோளிங்கா், வாலாஜாரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, குடியாத்தம், வளத்தூா், மேல்பட்டி, ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், சாமல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூா், புட்டிரெட்டிப்பட்டி, பொம்மிடி, திண்ணப்பட்டி, கருப்பூா் ஆகிய இடங்களில் நின்று காலை 10.50-க்கு சேலம் சென்றடையும். மறு மாா்க்கத்தில் இந்த ரயில் சேலத்தில் இருந்து 3.30-க்கு புறப்பட்டு அரக்கோணத்தை 8.50-க்கு அடையும்.

தினமும் பலதரப்பட்ட மக்கள் பயணித்து வந்த இந்த ரயில் திடீரென முன்அறிவிப்பின்றி ஜூலை 13-ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை என அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ரயில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 5.15-க்கு இந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments