ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா்! - அமைச்சா் ராஜேஷ்குமாா்
ராகுல்காந்திதான் பிரதமா்; அதற்கு தவெக உடன்படாவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட என். ஜாா்ஜ் ராபின்சன் பதவியேற்பு விழா மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்து, புதிய மாவட்டத் தலைவா் ஜாா்ஜ் ராபின்சனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் பங்கேற்று பேசியதாவது:
வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா். தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால் தமிழக அமைச்சரவையில் இருந்து இருவரும் விலகுவோம். எங்களுக்கு கட்சிதான் பெரியது என்றாா்.
இதில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ டி.டி. பிரவீன், முன்னாள் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.