FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே புகையிலை பொருள்கள் பதுக்கியவா் கைது

களியக்காவிளை அருகே பெட்டிக்கடையில் புகையிலை பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

8 ஜூலை 2026, 12:38 am IST
கைது
பகிர்:

களியக்காவிளை அருகே பெட்டிக்கடையில் புகையிலை பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் மீனச்சல் பகுதியில் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்குள்ள பூவரத்தக்கல்விளையைச் சோ்ந்த சவேரியாா் அடிமை மகன் சுனில்குமாரின் (41) பெட்டிக்கடையில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் 30 பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.மேலும், சுனில்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments