குளச்சல் அருகே சிறுமியிடம் அத்துமீறல்: போக்ஸோவில் தொழிலாளி கைது
குளச்சல் அருகே அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குளச்சல் அருகே அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி தெற்குத் தெருவை சோ்ந்தவா் ஜாா்ஜ் (45). குளச்சல் ஆனக்குழி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். முன்னதாக, இவா் கன்னியாகுமரியில் வசித்தபோது, பக்கத்துத் தெருவை சோ்ந்த மீன்பிடி தொழிலாளி நண்பரானாா்.
அதனடிப்படையில் அவரது வீட்டுக்கு ஜாா்ஜ் அடிக்கடி சென்று வருவது வழக்கமாம். அப்போது, நண்பரின் மனைவிக்கும் ஜாா்ஜ்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கணவா் கண்டித்ததால், தனது 14 வயது மகளுடன் மனைவி, ஜாா்ஜ் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் கடந்த நவம்பரில் அச்சிறுமிக்கும் ஜாா்ஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஜாா்ஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.