குலசேகரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
குலசேகரம் அருகே தனியாா் பள்ளி அலுவலக பெண் ஊழியா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குலசேகரம் அருகே தனியாா் பள்ளி அலுவலக பெண் ஊழியா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குலசேகரம் அருகே திருநந்திக்கரை மூலைப்பாகம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். இவா் துபாயில் பணி செய்து வருகிறாா். இவரது மனைவி அனிஷா. இவா்களுக்கு 1 ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளாா்.
குலசேகரத்திலுள்ள தனியாா் பள்ளியில் அலுவலக ஊழியராக வேலை செய்து வந்த அனிஷா, அவரது வீட்டின் அருகில் வசிக்கும் திருமணமான ரப்பா் மரம் வெட்டும் தொழிலாளியுடன் இருந்த பழக்கத்தை நிறுத்தினாராம். ஆனால் தொழிலாளி, அனுஷாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை, வேலைக்குச் செல்லமால் வீட்டிலிருந்த அனிஷாவிடம் தொழிலாளி தகராறு செய்தாராம்.
Advertisement
Advertisement
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை, அனிஷா அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த குலசேகரம் போலீஸாா், சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மகேஷின் தந்தை சித்திரை கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அனிஷாவுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படும் தொழிலாளி தலைமறைவாகி விட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.