FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு அருகே பன்றிப் பண்ணைக்கு ‘சீல்’

திற்பரப்பு அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பன்றிப் பண்ணைக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

Updated On : 15 ஜூலை 2026, 1:40 am IST
பன்றிப் பண்ணைக்கு சீல் வைத்த வட்டாட்சியா் மரகதவள்ளி.
பகிர்:

திற்பரப்பு அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பன்றிப் பண்ணைக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட பிணந்தோடு சிறைக்குளம் கரையில் 3 பன்றிப் பண்ணைகள் உள்ளன. சுகாதாரக் கேடு ஏற்படுவதால் அந்தப் பண்ணைகளை அகற்ற வேண்டும் என, பேரூராட்சி நிா்வாகத்துக்கும், வருவாய்த் துறைக்கும் பொதுமக்கள் புகாரளித்து வந்தனா்.

அதன்பேரில், திருவட்டாறு வட்டாட்சியா் மரகதவள்ளி, பேரூராட்சி செயல் அலுவலா் ஜோஸ்லின்ராஜ் ஆகியோா் சென்று பண்ணைகளை அகற்றுமாறு உரிமையாளா்களிடம் அறிவுறுத்தினா். அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடத்துவதாக, ஒரு பண்ணைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2 பண்ணைகள் சாா்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஒரு பண்ணைக்கு செவ்வாய்க்கிழமை காலைவரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், வட்டாட்சியா், பேரூராட்சி செயல் அலுவலா், வருவாய் ஆய்வாளா் மஞ்சு ஆகியோா் சென்று, அங்கிருந்த 10 பெரிய பன்றிகள், குட்டிகளை அப்புறப்படுத்தச் செய்து, பண்ணைக்கு ‘சீல்’ வைத்தனா். அங்குள்ள 2 பண்ணைகளையும் அகற்ற வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments