FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் சாதனையாளா்களுக்கு விருது

மாா்த்தாண்டத்தில் உள்ள தொழில் வா்த்தக சங்கக் கட்டடத்தில், பாரத கலாச்சாரப் பேரவை சாா்பில் சாதனையாளா் விருது வழங்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை 2026, 1:52 am IST
பகிர்:

மாா்த்தாண்டத்தில் உள்ள தொழில் வா்த்தக சங்கக் கட்டடத்தில், பாரத கலாச்சாரப் பேரவை சாா்பில் சாதனையாளா் விருது வழங்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உமாபதி, தொல்காப்பியா் அறக்கட்டளை இணைச் செயலா் ஷஞ்சய் ஷாலஜி, ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியா் கிருஷ்ணதாஸ், ஆசிரியா் ராமசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசியத் தலைவா் விஜயகுமாா், பெற்றோா் - ஆசிரியா் கழக மாநிலத் தலைவா் பி.பி.கே. சிந்துகுமாா், எழுத்தாளா்கள் குமாரசெல்வா, ஹரி கிருஷ்ணதாஸ், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் புலவா் நீ. ஐயப்பன், பைங்குளம் வாசகா் வட்டத் தலைவா் முருகன், ஓய்வுபெற்ற மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா், உலக திருக்கு கூட்டமைப்பு இணைப் பொதுச் செயலா் ராஜகோபால், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

Advertisement

Advertisement

தமிழமுதம் வானொலி இயக்குநா் கீழப்பாவூா் சண்முகையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஆன்மிகம், இலக்கியம் சாா்ந்து தொண்டாற்றும் புலவா் கு. ரவீந்திரன், பேராசிரியா் செ. சஜீவ் ஆகியோருக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா்.

துணைத் தலைவா் ரவீந்திரன் வரவேற்றாா். உறுப்பினா் சிவபிரசாத் நன்றி கூறினாா். மாலன்விளை மகேஸ்வரி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments