காமராஜா் பிறந்த நாள்: சிலைக்கு கட்சியினா் மரியாதை
காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த திமுக நிா்வாகிகள்.
முன்னாள் முதல்வா் காமராஜரின் 124ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், கலை-இலக்கிய பகுத்தறிவு பேரவைச் செயலா் தில்லைசெல்வம், அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், நாகா்கோவில் மாநகரச் செயலா் ப. ஆனந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், மாவட்ட துணைச் செயலா் சுகுமாரன், மாநில வா்த்தகரணி நிா்வாகி ராஜன் உள்ளிட் பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.ஆா். மாதவன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இணைச் செயலா் பிரேம்குமாா், முன்னாள் அமைச்சா் பச்சைமால், மாநகராட்சி உறுப்பினா்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், இளைஞஒணி அமைப்பாளா் ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், மண்டலத் தலைவா்கள் சிவபிரபு, செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் கோபகுமாா், முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி, மாவட்டப் பொருளாளா் முத்துராமன், மாநிலச் செயலா் மீனாதேவ், மாமன்ற உறுப்பினா்கள் ரோசிட்டா திருமால், ரமேஷ், தினகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.