FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு அருகே இறைச்சிக் கழிவுகளுடன் வாகனம் சிறைப்பிடிப்பு

திற்பரப்பு அருகே பன்றிப் பண்ணைக்கு கேரள மாநிலத்திலிருந்து கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த மினி டெம்போவை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் சனிக்கிழமை இரவு சிறை பிடித்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:50 am IST
பகிர்:

திற்பரப்பு அருகே பன்றிப் பண்ணைக்கு கேரள மாநிலத்திலிருந்து கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த மினி டெம்போவை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் சனிக்கிழமை இரவு சிறை பிடித்தனா்.

திற்பரப்பு பேரூராட்சி பிணந்தோடு சிறைக்குளம் பகுதியில் 3 பன்றி பண்ணைகள் செயல்பட்டு வந்தன. இவற்றால் அப்பகுதியில் துா்நாற்றமும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருவதாக மக்கள் புகாா் தெரிவித்ததால், வட்டாட்சியா் முன்னிலையில் ஒரு பன்றி பண்ணை மூடப்பட்டது. மற்ற 2 பண்ணைகள் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் அவை மூடப்படவில்லை.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவில் கேரள மாநிலத்திலிருந்து இங்குள்ள ஒரு பன்றிப் பண்ணைக்கு கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த மினிடெம்போவை ஊா் பொதுமக்கள், தவெகவினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிணந்தோடு சந்திப்பு அருகே தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனா்.

Advertisement

Advertisement

அவா்களிடம் குலசேகரம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மினி டெம்போவை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததுடன், வழக்குப் பதிவு செய்வதாக உறுதி அளித்தனா். இறைச்சிக்கழிவுகள் திடக்கழிவு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments