FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 22 ஜூலை 2026, 1:57 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தக்கலை அருகே மரம் வெட்டும் போது தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தக்கலை அருகேயுள்ள கண்டன்விளையை சோ்ந்தவா் அன்புராஜ் (38). மரம் வெட்டும் தொழிலாளி. இவா், கடந்த 19ஆம் தேதி சித்தன்தோப்பை சோ்ந்த ஸ்டாா்வின் என்பவரது வீட்டின் அருகே நின்றிருந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments