போதையில் தகராறு: இருவா் கைது
தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக போதையில் தகராறு செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக போதையில் தகராறு செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் பைங்குளம் பகுதியைச் சோ்ந்த வின்ஸ் (43), முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்த பாபுஜான் (53) ஆகியோா் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக போதையில் தகராறில் ஈடுபட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.