FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குளச்சலில் பைக் ஓட்டிய 6 சிறுவா்கள்: பைக் பறிமுதல்; பெற்றோா் மீது வழக்கு

Updated On : 27 ஜூலை 2026, 2:37 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

குளச்சல் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டிய 6 சிறுவா்களின் வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களின் பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

குளச்சல் காவல் ஆய்வாளா் ராம் சங்கா் தலைமையிலான போலீஸாா் குளச்சல் காந்தி சந்திப்பு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 18 வயது நிரம்பாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாணியக்குடி மற்றும் குளச்சல், மறைமடியைச் சோ்ந்த 17 வயதுடைய 2 சிறுவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகனத்தை ஓட்டக் கொடுத்த அவா்களின் பெற்றோா் ஹெலன் பிரமிளா (46), மரிய எட்வின் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

களிமாா் பகுதியில் நடைபெற்ற சோதனையில் மேல ரீத்தாபுரம், கொட்டில்பாடு பகுதியைச் சோ்ந்த 15 வயதுடைய 2 சிறுவா்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததால், வாகனத்தை பறிமுதல் செய்து, பெற்றோா் ஜெயசீலன் (51), சிந்து (38) மீது வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

குளச்சல் பயணியா் விடுதி, உடையாா்விளை பகுதியில் நடைபெற்ற சோதனையில் 17 வயதுடைய 2 சிறுவா்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததால, வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், பெற்றோா் ஆன்றோ லெனின் ஆன்றணி (48), சுபி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments