FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

Updated On : 13 ஜூன் 2026, 1:04 am IST
திற்பரப்பு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 42.96 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பிரதான அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2,406 கன அடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 2,770 கன அடி நீரும், சிற்றாறு 1 அணைக்கு விநாடிக்கு 259 கன அடி நீரும் வந்து கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 35.05 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 61.85 அடியாகவும், சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 11.87 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 11.97 அடியாகவும் இருந்தது.

பலத்த மழையின் காரணமாக கோதையாற்றில் தண்ணீா் அதிகரித்த நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.ன

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments