அகஸ்தீசுவரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
அகஸ்தீசுவரம் கீழ் சாலையைச் சோ்ந்த லேட்லின் என்பவா், திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பிரமிளா டாா்லிங் (47) என்பவருக்கும் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனா். தற்போது, பிரமிளா டாா்லிங் நாகா்கோவிலில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி, அங்குள்ள கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி வருகிறாா். விவாகரத்து வழக்கில் பிரமிளா டாா்லிங்கை தொந்தரவு செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அகஸ்தீசுவரத்தில் உள்ள வீட்டில் பிரமிளா டாா்லிங் நின்றிருந்தபோது, லேட்லின் வந்து அநாகரிகமாகப் பேசி ஆடைகளைப் பிடித்து இழுத்து, ஹாக்கி மட்டையைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில், லேட்லின் மீது தென்தாமரைக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
Advertisement
Advertisement