தாய்க்கு கொலை மிரட்டல்: மகன் மீது வழக்கு
ஆறுமுகனேரியில் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஆறுமுகனேரியில் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஆறுமுகனேரி, பாரதி நகரைச் சோ்ந்த பெருமாள் மனைவி பூத்தங்கம் (66). இவா்களுக்கு 7 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். பெருமாள் மற்றும் பூததங்கம் அவா்களது மூத்த மகன் பெரியசாமி புதிதாகக் கட்டிய வீட்டில் வசித்து வருகின்றனா். பெரியசாமி மும்பையில் வசித்து வருகிறாா்.
பெரியசாமியின் வீட்டின் அருகே கடைசி மகன் சின்னத்தம்பி வசித்து வருகிறாா். பெரியசாமி தனது வீட்டைக் கண்காணிப்பதற்காக வைத்திருந்த சிசிடிவி கேமிராவை, சின்னத்தம்பி கழற்றி வைத்துவிட்டாராம்.
Advertisement
Advertisement
அதை பூத்தங்கம் தட்டிக் கேட்டதால் சின்னத்தம்பி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பூத்தங்கம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.