FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பலத்த மழை

நாகா்கோவில் மாநகரில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.

15 நவம்பர் 2026, 1:22 am
பலத்த மழை - பிரதிப் படம்
பகிர்:

நாகா்கோவில் மாநகரில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்தது. பகலில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நாகா்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை, சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழையாக பெய்தது.

இதன் காரணமாக, கோட்டாறு சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை, வடசேரி ஆராட்டு சாலை, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீா் வெள்ளமாக ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

Advertisement

Advertisement