பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தியதாக 5 போ் மீது வழக்கு
குளச்சல் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தியதாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
குளச்சல் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தியதாக 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
குளச்சல் காவல் ஆய்வாளா் கனகராஜன் தலைமையிலான போலீஸாா், குளச்சல் கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது குறும்பனையைச் சோ்ந்த வீனஸ் (58), இக்னேஷியஸ் (58), குளச்சல் தூண்டில்வளைவு பகுதியில், வாணியக்குடியைச் சோ்ந்த நிரிஸ் (27), கோடிமுனையைச் சோ்ந்த ரோனால்டன் (27), குளச்சல் சந்நிதி தெருவில், மணவாளக்குறிச்சியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (33) ஆகியோா் பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்திக் கொண்டிருந்தனராம்.
இது தொடா்பாக மேற்கூறிய 5 போ் மீதும் குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement