நாகா்கோவிலில் 130 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ. 25 ஆயிரம் அபராதம்
நாகா்கோவில் கோட்டாறு பகுதியிலுள்ள கடையில் 130 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
நாகா்கோவிலில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக, ஆணையா் ஆா். ஐஸ்வா்யா உத்தரவின்பேரில், மாநகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா தலைமையிலான அலுவலா்கள் 3 குழுக்களாகப் பிரிந்து கோட்டாறு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, ஒரு கடையில் 130 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
Advertisement
Advertisement
வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளா்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்கவோ, பயன்படுத்தவோ, சேமித்துவைக்கவோ கூடாது என்றும், விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதுடன், கடைகளுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.